ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :531 days ago
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுவாமிகள் இளையான்குடி வீதிகளின் வழியே உலா வந்த போது பக்தர்கள் அர்ச்சனை செய்தும் தேவாரம் மற்றும் திருவாசக பாராயணங்களை பாடி வழிபட்டனர்.