தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி கடைசி சனி சிறப்பு பூஜை
ADDED :781 days ago
திருப்பூர்; தாளக்கரை பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாளக்கரை பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் துளசி மாலை மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் ஐந்து தலை சர்ப்ப அலங்காரத்தில் பக்தர்ளுக்கு காட்சியளித்த லட்சுமி நரசிம்மர் மற்றும் தாயார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.