சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் யோக நரசிம்மர் உலா
ADDED :637 days ago
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், சேஷ வாகனத்தில் யோக நரசிம்மராக பெருமாள் உலா வந்தார். பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. முதல் நாள் இரவு அன்ன வாகனத்தில் மோகினியாக அவதரித்த பெருமாள், நேற்று இரவு யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.