மயிலம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
                              ADDED :472 days ago 
                            
                          
                          
மயிலம்; மயிலம் அடுத்த ரெட்டணையில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடக்கிறது. விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 15ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ‘பாஞ்சாலி துகிலுரிப்பு, பரந்தாமன் அருளும்’ என்ற பாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. வரும் 19ம் தேதி மாலை தீமிதி திருவிழாவும் 21ம் தேதி தர்மர் பட்டாபிேஷகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.