அரியனேந்தலில் செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED :479 days ago
பரமக்குடி; பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதன்படி கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், தினமும் அய்யனாருக்கு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் தீபாரதனை நடந்தது. மேலும் விவசாயிகள் குதிரை எடுப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அப்போது விநாயகர் கோயிலில் இருந்து குதிரை, காளை மாடு உள்ளிட்ட சிலைகளை ஆண்கள் தலையில் சுமந்து சென்றனர். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரியை சுமந்து சென்று அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.