உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் இந்த பேச்சியம்மன்?

யார் இந்த பேச்சியம்மன்?

பேச்சியம்மன் கிராமத்துதெய்வமாக இருக்கிறாள். காஞ்சிப்பெரியவர் இந்த தெய்வம் பற்றி விளக்கமளிக்கும் போது, வாக்குக்கு அதிபதியான வாக்தேவதையை சரஸ்வதி என்கிறோம். சரஸ்வதி நாவில் குடியிருந்தால் நல்ல பேச்சு வரும், சொற்பொழிவுத்திறன், புலமைத்திறன் இருக்கும். இதுவே பிற்காலத்தில் கிராமங்களில் பேச்சு அம்மன் என்றாகி, பேச்சியம்மனாக திரிந்து விட்டது என்கிறார். வாரியார் சுவாமிகள் வேறுமாதிரியாக விளக்கமளிக்கிறார். காரைக்காலம்மையார் சிவ பெருமானிடம் பேய் வடிவத்தைக் கேட்டுப் பெற்றார். இதனால் பேய்ச்சி என்ற பெயரைப் பெற்றார். இதுவே பேச்சி என திரிந்தது. இவரே கிராமங்களில் பேச்சியம்மனாக வழிபடப்பெறுகிறார். இவளை வணங்கினால் ஆன்மிகத்தில் வல்லமை பெறலாம். கல்வி விருத்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !