உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி மஹாயாகம்; வெள்ளிக் கவச அலங்காரத்தில் வராஹி

ஆஷாட நவராத்திரி மஹாயாகம்; வெள்ளிக் கவச அலங்காரத்தில் வராஹி

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் கோயிலில் சொர்ண வராஹி அம்மன் அருள் பாலிக்கிறார்.இக்கோயிலில் தொடர்ந்து ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா நடந்தது. காலையில் அபிஷேக ஆராதனைகளும், மாலையில் தினமும் அம்மன் மஞ்சள் முகம், சமயபுரம் மாரியம்மன், மீனாட்சி, சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலை உலக மக்கள் நலன் கருதி மஹாயாகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அம்பாள் மாலையில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !