ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; கூழ் வழங்கி பக்தர்கள் வழிபாடு
ADDED :451 days ago
கன்னிவாடி; தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் நீர், பால் அபிஷேகம் நடந்தது. வாலை திரிபுரை சக்திக்கு விசேஷ மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி: கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்த கூழ் தயாரிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு கூழ் வழங்கல் நடந்தது.
* சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.