தேய்பிறை சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :794 days ago
வை; பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் தேய்பிறை சஷ்டி விரதத்தை முன்னிட்டும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் முருகப்பெருமான் புஷ்ப அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.