தங்க காப்பு அலங்காரத்தில் திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் அருள் பாலிப்பு
ADDED :642 days ago
திருக்கோவிலூர் திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், நடந்தது. தொடர்ந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். சுவாமிக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.