உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கிருத்திகை; சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி வீதியுலா

ஆடி கிருத்திகை; சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி வீதியுலா

புதுச்சேரி; சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. சாரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நேற்று நடந்தது. காலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து, சுவாமி வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் கோவில் குருக்கள், உபயதாரர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !