கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில் பறவை காவடி நேர்த்திக்கடன்
ADDED :590 days ago
கமுதி; கமுதி அருகே கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையைமுன்னிட்டு பரமக்குடி சக்தி முருகன் கோயில் இருந்து பக்தர்கள் பறவைக் காவடி, பால்குடம், காவடி எடுத்து அபிராமம் வழியாக பாத யாத்திரையாகவந்தனர். பின் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவியப் பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகை அபிஷேகங்கள் நடந்தது. பின் 108 சங்காபிஷேக தீர்த்தம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி, பரமக்குடி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.