மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
403 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
403 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
403 days ago
சென்னை; வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், தேசிய சேவாபாரதி தொண்டர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை, 280ஐ தாண்டி உள்ளது; நுாற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. ஏராளமான வீடுகளும், அதில் வசித்தவர்களும் மண்ணில் புதையுண்டுள்ளனர். இப்பகுதியில், ராணுவத்தினர், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய சேவா பாரதி அமைப்பின் சார்பில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொண்டர்களும், மீட்பு மற்றும்நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்குவது, இறந்தவர்கள் உடல்களை எரிப்பது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், இவ்வமைப்பு சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, உணவு, குடிநீர், துணிகள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகின்றன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், இந்த அமைப்பு முடிவு செய்து உள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர், தேசிய சேவாபாரதி, கேரளம், திரிசூர் கிளை, ஆக்ஸிஸ் வங்கி கணக்கு எண் 921010026604991, IFSC: UTIB0001800 என்ற கணக்கிலும், www.sevabharathikeralam.in/donate என்ற இணையதளம் வழியாகவும் பணம் அனுப்பலாம்.
403 days ago
403 days ago
403 days ago