சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி பூஜை
ADDED :399 days ago
சின்னசேலம்; சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி யாகம் நடந்தது.உலக நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ நடந்த யாகத்தில் 11 கலசங்கள் வைத்து ஜெயக்குமார் பட்டாச்சார்யார் தலைமையில் 127 வகையான திரவியங்கள் போட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், கட்டளைதாரர் ஆதிசேஷன், பாஸ்கரன், மணிவண்ணன் டாக்டர்கள் மனோகர், அரவிந்தன், முத்து, ராஜ்குமார், வேல்மணி, சேட்டு உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.