கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :582 days ago
கடலுார்; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபி ஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபி ஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 21 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர் கோவில் உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.