மானாமதுரை சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :440 days ago
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நாட்களின் போது ஆனந்தவல்லி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இன்று அதிகாலை உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு திருமந்திரம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன், கொடி மரத்திற்கு பூஜை செய்து காலை 9:45 மணிக்கு கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். ஆனந்தவல்லி அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஆடித்தபசு திருவிழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.