பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் மாலை மாற்றுதல் வைபவம்
ADDED :437 days ago
திருநகர்; மகாலட்சுமி நெசவாளர் காலனி வர சித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழாவின் உச்ச நிகழ்ச்சியாக ஆண்டாள் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது. விழாவில் முதல் நாள் ஆண்டாள் ஏகாந்த சேவை, இரண்டாம் நாள் ரெங்க மன்னார் சயன சேவை அலங்காரம் நடந்தது. உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர்கள் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்து, மாலை மாற்றும் நிகழ்ச்சி, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு உற்சவர்கள் சிம்மாசனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.