அற்புத குபேர விநாயகர் கோவிலில் அரசு வேம்பு திருமணம்; மழை வேண்டி வழிபாடு
ADDED :479 days ago
திருப்பூர்; ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் எதிரே உள்ள ஸ்ரீ அற்புத குபேர விநாயகர் கோவிலில் அரசு மற்றும் வேம்பு மரத்துக்கு திருமணம் நடந்தது. பட்டுச்சேலை, பட்டு வேட்டி கட்டி, மாலைகள் அணிவித்து, மங்கல வாழ்த்து பாடலுடன் திருமண விழா நடத்தப்பட்டது. மழை வளம் வேண்டியும், உலகில் அமைதி தழைக்க வேண்டியும், ஆண்டுதோறும் இவ்வாறு திருமணம் நடப்பதாக சிவாச்சார்யார்கள் கூறினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.