உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி கவுண்டன் புதூர் புளியடி கருப்பராயன் கோவில் பொங்கல் விழா

காசி கவுண்டன் புதூர் புளியடி கருப்பராயன் கோவில் பொங்கல் விழா

அவிநாசி; காசி கவுண்டன்புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள புளியடி கருப்பராயன், கன்னிமார் கோவிலில் பொங்கல் விழா.

அவிநாசி ஒன்றியம், காசிகவுண்டன் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள புளியடி கருப்பராயன், கன்னிமார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர், காந்திபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மா விளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக திருவிளக்கு பூஜை மற்றும் அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முனியப்பன் சாமி முன்பு கிடா வெட்டுதல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புளியடி கருப்பராயன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !