அழகு நாச்சியம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED :429 days ago
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் என்னும் பிடாரி, நாகவல்லி என்னும் மாரியம்மன், விக்னேஸ்வரர், ஐயனார், மகிடாசுரமர்த்தினி கோவிலில், 42ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. அதையொட்டி, கடந்த 6ம் தேதி கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து அழகு நாச்சியம்மன், நாகவல்லி, ஐயனார், மகிடாசுரமர்த்தினி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், செடல் உற்சவமும் நடந்தது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் ஜெயலலிதா செய்திருந்தார்.