உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெய்யில் அதிரசம் சுட்டு வழிபாடு

கோவில் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெய்யில் அதிரசம் சுட்டு வழிபாடு

போச்சம்பள்ளி; போச்சம்பள்ளி அருகே, கோவில் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெய்யில், அதிரசம் சுட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜம்புகுட்டப்பட்டி, வண்டிகாரன்கொட்டாய் கிராமத்திலுள்ள சென்னம்மாள் கோவிலில், ஆடி மாத தேர் திருவிழா நடந்து வருகிறது. நேற்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, ஹோம பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் அதிரசம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்யில் அதிரசம் சுட்டு எடுத்து, மற்ற பக்தர்களுக்கு வழங்கினர். இதை காண அப்பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !