திரு ஆவினன்குடி கோயிலில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம்
பழநி; பழநி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி திரு ஆவினன்குடி கோயிலில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு அடிவாரம் வர்த்தகர்கள் சார்பில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்றனர். பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ், வி.எச்.பி., திருக்கோயில்கள் திருமடங்கள் மாநில செயலாளர் செந்தில்குமார் உட்பட 900 க்கு மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர். செந்தில் குமார் கூறியதாவது:ஆறு மாதமாக தமிழக அரசு பெருந்திட்ட வரைவு மூலம் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள அப்புறப்படுத்தி உள்ளனர் .300-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் அப்புறப்படுத்துள்ளன .பூங்கா ரோடு சன்னதி ரோடு அய்யம்பள்ளி ரோடு பகுதிகளில் உள்ள கட்டடங்களை அகற்ற அரசு முயற்சி செய்து வருகிறது. அரசிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளோம். கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை பழநி முருகனிடம் பால்குடம் எந்தி பிரார்த்தனை செய்ய உள்ளோம். விரைவில் அரசின் கவனத்தை ஈர்க்க பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.