ஆடி அனுஷம்; காஞ்சி மகா பெரியவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :420 days ago
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் ஆடி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவரின் திருவுருவப்படம் மற்றும் அவருடைய சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகானின் அருளைப் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.