நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தின விழா; கொடி வணக்கம் செய்த கோவில் யானை
ADDED :438 days ago
திருநெல்வேலி ; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை கோவில் முன் தேசிய கொடியேற்றப்பட்டது. கோவில் யானை காந்திமதி, துதிக்கையால் வணங்கி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர். விடுமுறை தினம் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.