உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பவித்ரோத்சவ விழா; ஆக., 19ல் கருட சேவை

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பவித்ரோத்சவ விழா; ஆக., 19ல் கருட சேவை

பரமக்குடி; ‌ பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்சவ திருவிழா நேற்று இரவு துவங்கியது. பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் வடக்கு நோக்கி சேவை சாதித்தபடி உள்ளார். இக்கோயிலில் ஆண்டாள் தனி சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக அனைத்து உற்சவங்களும் வருடம் முழுவதும் நடக்கிறது. அப்போது ஒவ்வொரு விழாக்களின் போதும் ஏற்படும் ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பரிகார உற்சவம் நடத்தப்படுகிறது. இதன்படி பவித்ரோத்சவம் நேற்று இரவு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து உற்சவர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மூலவர் பரமஸ்வாமி என அனைத்து சன்னதிகளிலும் பவித்திர மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் தினமும் காலை, மாலை சிறப்புகள் நடந்து, ஏராளமான நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. ஆக., 19 அன்று 5 ம் நாள் விழாவில் சுந்தரராஜ பெருமாள் பெரிய திருவடியான கருட வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !