வேப்பிலை அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :416 days ago
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் அருகே உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வேப்பிலை அலங்காரத்திற்கு நடுவே வளையல் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.