ஆவணி மாத பிறப்பு : பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :745 days ago
போடி; ஆவணி மாத பிறப்பு முதல் சனிக் கிழமையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.