12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா
ADDED :413 days ago
மேலுார்; மேலவளசை மலையம் பெருமாள் கோயில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆக.11 காப்பு கட்டி விரதமிருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் (ஆக. 17) மது பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு வரப்பட்டது. (ஆக.18) மந்தையில் இருந்து புரவிகள் மலையம் பெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத் திருவிழாவில் ஒத்தப்பட்டி, மேலவளசை மக்கள் கலந்து கொண்டனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு இத் திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடதக்கது.