ஆவணி செவ்வாய்; கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :413 days ago
கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் மயில் இறகு மற்றும் புஷ்பஅலங்காரத்தில் வெள்ளி காப்பு கவசத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.