பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திரிசதி அர்ச்சனை; பக்தர்கள் பரவசம்
ADDED :783 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திரிசதி அர்ச்சனை நடந்தது.
ஐஸ்வர்யம், ஆரோக்கியமான வாழ்க்கை, சகல வரங்கள் வேண்டி சுப்பிரமணிய திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியும் பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூலவர் முருகப்பெருமான் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.