பரத்வாஜ் சுவாமியின் கையை பிடித்து செல்லும் வராஹி அம்பாள் ஓவியம்; பக்தர்கள் பரவசம்
சென்னை; சென்னை அம்பத்தூர் புவனேஸ்வரி பீடாதி பதி பரத்வாஜ் சுவாமி கள் கையை பிடித்தபடி வராஹி அம்பாள் செல்லும் ஓவியம் அவரது பக்தர்களிடையே பர வசத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூர் யோகமாயா புவ னேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் இளம் வயதில் காசி, கங்கையில் கழுத்தளவு நீரில் அமர்ந்து 3 நாட்கள் மனமுருகி வராஹி ஜெபம் செய்தார். மூன்றாவது நாளில் வராஹி அம்பாள், பரத்வாஜ் சுவாமிகளுக்கு பிரத்யேகமாக காட்சியளித்து அவரது கையை பிடித்து மணிகர்ணிகா கட்டத்திற்கு அழைத்து சென்று, தனது விஸ் வரூப தரிசன காட்சியை காண்பித்து ஆசி வழங்கினார். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் வராஹி அம்பாள், பரத்வாஜ் சுவாமிகளின் கையை பிடித்து மணி கர்ணிகா கட்டத்திற்கு அழைத்து செல்லும் காட்சியை மொரீசியஸ் ஓவியர் வேலன் தத்ரூ பமாக வரைந்துள்ளார். இந்த ஒவியம் பரத்வாஜ் சுவாமிகளின் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.