உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

நரிக்குடி; நரிக்குடி வீரசோழனில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் கோயில் சிதிலமடைந்திருந்தது. திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்று காலை 9.05க்கு வருடாபிஷேகம் நடந்தது யாகசாலைகள் அமைக்கப்பட்டு, வேள்விகள் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, புண்ணியகாசனம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் சுவாமிக்கு சர்வ அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனை கட்டப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் சந்திரசேகர், அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், உறுப்பினர்கள் குமரேசன், இளங்கோவன், அரியமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !