உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைப்பாற்றில் கண்டெடுக்கப்பட்ட கருடாழ்வார் சிலை; பக்தர்கள் வழிபாடு

வைப்பாற்றில் கண்டெடுக்கப்பட்ட கருடாழ்வார் சிலை; பக்தர்கள் வழிபாடு

சிவகாசி; வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளிக்கும்போது கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நேற்று சிலர் பாலத்தின் அருகே குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் காலில் சிலை போல் ஒன்று தென்பட்டது. அதனை வெளியே எடுத்துப் பார்க்கையில் உடைந்த நிலையில் காணப்பட்டது. அந்த சிலையை கரையில் வைத்து மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த பூசாரி ஒருவர் கூறுகையில், இது கல்லால் செய்யப்பட்ட கருடாழ்வார் சிலை என்றார். இதுகுறித்து போலீசார், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !