உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே குத்தாரிபாளையத்தில் உள்ள, மிகவும் பழமையான பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள, குத்தாரிபாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், முனியப்பன் ஆகிய சன்னதிகள் உள்ளன. புதிதாக விநாயகர் சுவாமி சன்னதி அமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, திருப்பணிகள் செய்து வர்ணம் தீட்டப்பட்டது. கடந்த, 21ம் தேதி மாலை புனித நீர் வழிபாடும், மூத்த பிள்ளையார் வழிபாடும் நடைபெற்றது. 22ம் தேதி பவானி ஆற்றில் இருந்து புனித நீரும், முளைப்பாரியும் கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோபுரத்தில் விமான கலசம் அமைத்து, எண் வகை மருந்து சாத்தப்பட்டது. பின்பு சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தைச் சேர்ந்த மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாகவேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை முடிந்த பின், 9:45 மணிக்கு புனித நீர் தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதன் பின் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், மூலவர் சுவாமி மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை செய்து பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஹிந்து சமய அறநிலை துறை அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், கல்யாணசுந்தரம், சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !