உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், சிவாச்சாரியர்கள் பக்தர்கள் சூழ நேற்று நடந்தது.


கோயில் தேர்த் திருவிழா முகூர்த்தகால் நடும் விழா கடந்த ஜன.28ல் துவங்கியது. முதல் நிகழ்வான பூச்சாட்டு விழா கடந்த 17ல் நடந்தது.


நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியர்கள் பக்தர்கள் சூழ சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, கோயில் மகா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் கொடியேற்றினர். தொடர்ந்து கோவில் முகப்பில் மூன்று கம்பம் நடப்பட்ட பகுதியில் தாரை தப்பட்டை முழங்க அக்னி சாட்டு நடந்தது.


வரும் 27ல் திருவிளக்கு பூஜையும், மார்ச் 3ல் திருக்கல்யாண வைபவமும், தேர்த்திருவிழா மார்ச் 4- மதியம் 2.05 மணிக்கும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !