கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சங்கீத சமர்ப்பண் நிகழ்ச்சி
ADDED :5 minutes ago
கோவை; ராம் நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி மற்றும் கோவை கலா சங்கமம் குளோபல் இணைந்து சங்கீத சமர்ப்பண் என்ற நிகழ்ச்சி கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நேற்று 27 ம்தேதி நடந்தது. இதில் குமாரி காம்யா ஸ்ரீ பரசுராம் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது. வயலின் பிருந்தா ரகுநாத், மிருதங்கம் கஞ்சிரா சாய்ராம் விஸ்வநாதன் உடன் தெய்வீக பாடல்கள் பாடப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்தனர்.