புரட்டாசி சோம வாரம்; சுந்தராபுரம் புவனேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :7 minutes ago
கோவை: புரட்டாசி மாதம் இரண்டாவது சோம வார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சிவ பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.