உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும் நிகழ்வு

கோவை கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும் நிகழ்வு

கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வானது கடந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று முதல் துவங்கி கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெற்று வருகிறது புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் ரோடு நாகசாய் மந்திரில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வுடன் குழந்தைகளுக்கான சாய்பாபா படம் வண்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாய்பாபாவின் படத்திற்கு வண்ணம் தீட்டுகின்றனர் குழந்தைகளுக்கு சாய் பாபா படம் மற்றும் பிரசாதம்  வழங்கப்பட்டது  குழந்தைகளுக்கு பரிசாக அன்னபூர்ணா மசாலா உணவுப் பொருட்கள் பாயசம் மிக்ஸ் குலோப் ஜாமுன் மிக்ஸ் சாம்பார் பவுடர் கரம் மசாலா பவுடர் ஆகியன கொடுக்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !