உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு காய்கறி அலங்காரம்

 புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு காய்கறி அலங்காரம்

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் சனிக் கிழமை சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி, காலை உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனையும், முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் சுவாமிகள் காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும், அக்., 3ம் தேதி பழ அலங்காரம், 10ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், 17ம் தேதி முத்தங்கி அலங்காரத்தில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !