நடுவீரப்பட்டு ராஜராஜே ஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :14 hours ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜராஜே ஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மாலை விநாயகர், ராஜராஜேஸ்வரி,ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா தீ பாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு,அம்மனை வழிபட்டனர்.