உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில் உழவாரப் பணி

 மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில் உழவாரப் பணி

மாதப்பூர்: மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் வளாகத்தில், ப்ரேரணா அறக்கட்டளை, அப்பர் உழவாரப் பணிக்குழு சார்பில் நேற்று உழவாரப்பணி நடந்தது. கிரிவலப் பாதை, வழித்தடம், கோவில் வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. முட்செடிகள், புதர்களும் வெட்டி அகற்றப்பட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !