சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர்சக்தி பீடத்தில் வேள்வி பூஜை
ADDED :416 days ago
கிள்ளை; சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா நடக்கிறது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் பங்கேற்று, துவக்கி வைக்கிறார். அதையொட்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட தலைவர் கோபு துவக்கி வைத்தார். துணைத் தலைவர்கள் சீத்தாலட்சுமி, செயலாளர் கண்ணன், போரசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார், மணிவாசகம் முன்னிலை வகித்தனர். பூஜையில் துணைத் தலைவர்கள் கோவிந்தராஜன், கணேசன், சஞ்சிவிராயர், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் கூடுதல் செயலாளர் பார்த்தசாரதி, அரியகொடி முத்தையா, லதா காளிமுத்து, சுமதி, அஞ்சம்மாள், தேவி, பிரியா, புவனா, சுவாதி, சாந்தி ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.