திரவுபதி அம்மன் கோயில் விழா வீமன் வேடமிட்டு நகர்வலம்
ADDED :430 days ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராம மண்டகப்படிதாரர்களின் வீமன் வேடமிட்டு நகர்வலம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஆவரேந்தல் கிராமத்தினரின் வீமன் வேட நிகழ்வும், இன்று செங்கமடை கிராமத்தினரின் வீமன் வேடம் நிகழ்வும் நடைபெற்றது. இதில் முக்கிய வீதிகள் வழியாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடலில் வர்ணம் பூசி நகர்வலம் வந்து பக்தர்களை மகிழ்வித்தனர். மண்டகப் படிதாரர்கள் சார்பில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30 ல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து செப்.1 ல் மஞ்சள் நீராடுதல் விழாவும், செப்.3 ல் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.