உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிருத்தியங்கிரா தேவி கோவிலில் ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பிருத்தியங்கிரா தேவி கோவிலில் ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தேவகோட்டை; தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அட்சய மகா கணபதி, அத்தி வராஹி அம்மன், பிருத்தியங்கிரா தேவிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேய்பிறை அஷ்டமி என்பதால் சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர் சுவாமி தரிசனம் செய்தனர். தேவகோட்டை நகரில் மாலையில் ஸ்வர்ண ஆஹர்சன பைரவருக்கு சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !