உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபிநாதசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா; அபிஷேக, ஆராதனை

கோபிநாதசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா; அபிஷேக, ஆராதனை

ரெட்டியார்சத்திரம்; கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஆக. 29ல் வழுக்கு மரம் ஏறுதல் நடக்கிறது. ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் பிரசித்தி பெற்ற கோபிநாத சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, சிறப்பு பூஜைகளுடன் நேற்று துவங்கியது. மலைக்கோயிலில் இருந்து இன்றுஅடிவார பகுதியில் இறங்கிய உற்சவர், காமாட்சிபுரம், எல்லைப்பட்டி, கொத்தப்புள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் திருக்கண் எழுந்தருளல் துவக்கினார். முக்கிய நிகழ்ச்சியான உறியடி திருவிழா, ஆக. 29ல் நடக்கிறது. முன்னதாக ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயில் முன்பு, வழுக்கு மரம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் ஊன்றுதல் நடக்கும். ரதத்தில் எழுந்தருளிய உற்சவர் கோபிநாதரின் அனுமதி பெறலை தொடர்ந்து, வழுக்கு மரம் ஏறுதல் துவங்கும். பின்னர் உறியடி திருவிழா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !