காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
ADDED :444 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் . அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் . இந்நிலையில் கடந்த 35 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடும் பணியில் கோயில் அலுவலர் மூர்த்தி முன்னிலையில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரொக்கப் பணமாக 1.97,72,140 ரூபாய், தங்கம் 98.00கிராம், வெள்ளி 605.கிலோ 100 கிராம், அமெரிக்கா மற்றும் மற்ற வெளி நாடுகளில் இருந்து வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை 233 என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளன.