உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தூர் பெரியக்காண்டியம்மன், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

புத்தூர் பெரியக்காண்டியம்மன், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை;  வடமதுரை புத்தூரில் ஸ்ரீமுடிமலைஆண்டி, பெரியக்காண்டியம்மன், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை மகா கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, வீராசாமிநாதன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !