மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
354 days ago
மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
354 days ago
பெருமாள்பட்டு; திருவள்ளூர் அடுத்த 89 பெருமாள் பட்டு பகுதியில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வரர் கோவில். இங்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 13ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. பின் 14ம் தேதி இரண்டாம்கால யாகசாலை பூஜையும், கோ பூஜை, சுமங்கலி பூஜை, மகா பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று மூன்றாம்கால யாகசாலை பூஜை நடந்தது. மகா கும்பாபிஷேக நாளான நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின் காலை 10:45 மணிக்கு ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீதிருக்கண்டீஸ்வரர் கோபுர கலச கும்பாபிஷேகமும் பரிவார சுவாமிகளுக்கு கலசாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நட்ந்தது. இதில் பெருமாள்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
354 days ago
354 days ago