/
கோயில்கள் செய்திகள் / கதளீ கவுரி விரதம்; சிவ சக்தியை வழிபட சுக்ர தோஷம் நீங்கும்.. சுகமான வாழ்வு அமையும்!
கதளீ கவுரி விரதம்; சிவ சக்தியை வழிபட சுக்ர தோஷம் நீங்கும்.. சுகமான வாழ்வு அமையும்!
ADDED :408 days ago
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் பூஜை செய்வது சிறந்தது. ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியில் செய்யப்படுவது கதளீ கவுரி விரதமாகும். வாழை மரத்தடியில், இலையில் அம்மனை வைத்து, வாழை பழம் படைத்து வழிபட வேண்டும். வீட்டில் பலகையில் இலையை வைத்து, அதன்மீது அம்மன் படம் வைத்தும் வழிபடலாம். இந்த கவுரி விரத வழிபாட்டால் திருமண தடை நீங்கும். வாழையடி வாழையாக குலம் தழைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சோமவார தினமான இன்று சிவ பார்வதியை தரிசிக்க வளமும் நலமும் சேரும்.. சுகமான வாழ்வு அமையும்!