புதுவாயல் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :354 days ago
கும்மிடிப்பூண்டி; கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் கிராமத்தில், ஆனந்தவள்ளி சமதே அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்த, 107வது லிங்கமாகும். வரலாற்று சிறப்பு மிக்க புதுவாயல் அகத்தீஸ்வரர் கோவிலில், பரம்பரை அறங்காவலர் சரவண குருக்கள் தலைமையில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இம்மாதம், 13ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து கோவில் அருகே யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு கோவில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அகத்தீஸ்வர், ஆனந்தவள்ளி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் அகத்தீஸ்வரரை வழிபட்டனர்.